well come to காதல் கவிதைகள்..!!

வெள்ளி, 9 மார்ச், 2012

முப்பொழுதும் உன் கற்பனையே...



உன் கருவிழியில் கருவாக 
என் காதலானது கண்டேன் 
கச்சிதமாய் பிடித்துக்கொண்டாய் 
என் நெஞ்சத்தை...

எல்லாம் நேர் மாறாக நடக்கிறது 
நேரமும் நெடு நாளாய் அதே 
நாளிகையை காட்டுகிறது... 
பகலும் இரவானது 
இரவும் பகலானது...

நெல் மணி போல் 
சிதறியது சிந்தனைகள் 
பங்கசு போல்
பற்றிக்கொண்டது 
சஞ்சலமும் பதற்றமும்...

உன்னை நினைக்கையில் 
பல்லியும் ஒலி எழுப்புகிறது... 
பால் நிலவும் கரைகிறது..

காதல்


 
காதல் மதி மயங்கும் நிலையெனில் 
 அந்த நிலை எனக்கு,
காதல் கனவுலக வாழ்க்கையெனில் 
 அந்த வாழ்வெனக்கு,

காதல் வாலிப கிறுக்கெனில் 
 அது எனக்குள்ளும் இருக்கு,
காதல் கண்கட்டு வித்தையெனில் 
 அது கட்டியது என் கண்களை.

காதல் தொலைதூர பயணமெனில் 
 அதில் தொலைந்தவன் நான்,
காதல் கிரிக்கெட் என்றால் 
 நான் ஆனேன் கிளீன் போல்ட்.

வெள்ளி, 2 மார்ச், 2012

இதயமும் சருகாகி போகிறதே ,,,!



பாசத்தின் பணிவோடு 
பலநாளாய் காத்திருக்கிறேன் 
வேஷத்தை பாசமென்று நம்பி 
வேதனையில் போவதேனம்மா

அன்பிலே ஆழமும் கண்டு 
அகத்திலே இடமும் கொண்டு 
அணைத்திடும் நாள் வருமென்று 
ஆவலுடன் பார்த்திருக்கிறேன் 
அரவணைத்தவர்கள் வார்த்தையிலே 
அடிமையாகி நீ போவதேனம்மா

சதியெனும் தீயினிலே 
இதயமும் சருகாகி போகிறதே 
இன்பத்தை இழந்து 
இருளிலே முழ்கிறது வாழ்வு 
இனிமேலும் நீ வராமல் போனால் 
இறந்திடும என் ஜீவன் ,,,!

காதல் என்பது கனிவான பேச்சு...!


'
காலம் நாலு பருவமாச்சு - என் 
காதல் உன் மேலாச்சு...
மோதல் எமக்குள் இல்லாமல் போச்சு...!
சாதல் வரை சந்தோசமாச்சு...!!
 
இன்பம் தருதல் உனக்கான பேச்சு - என்னை 
சந்தோசப்படுத்தலே உன் வேலையாப்போச்சு...
துன்பம் எமக்குள் இல்லாமலாச்சு...!
சொர்க்கத்திலே எமது வாழ்வாகிப்போச்சு...!!
 
கோபம் சில முறை வந்தாகிப்போச்சு....
ஊடல் கூட பல முறையாச்சு...!
பிரிதல் எமக்குள் நடவாத பேச்சு...!!
அலட்டுதல்தானே நாள்தோறும் பேச்சு...!!!

காத்திருக்கு மூச்சு !!!




காதலாய்ச்  சிரித்தாய் 
கை நீட்டி அணைத்தாய் 
கண்விழித்தேன் நிஜமென்று 
கனவு என்று சொன்னது 
கண்ணீர் காய்ந்த விழிகள்....

காத்திருந்த காலங்கள்
கழிந்தன  ஒரு நொடியில்....
கை வலிக்க வரைந்த கவிகள் 
கரைந்து போயின வளியில்.....
கண்ணீரும் காய்ந்தன விழியில்....