well come to காதல் கவிதைகள்..!!

புதன், 25 ஏப்ரல், 2012

!! வேறாய் இருந்தாலும் நம் வேதம் ஒன்றுதான் !!!


உனையும் எனையும் 
பிரிக்கிறார்களாம் 
ஏதும் அறியாக் 
காதல் செய்ததால்

தேகம் பாராமல் 
தேன் கிண்ணமாய் 
இனிக்கும் காதலை 
தேகத்தால் பிரிக்கப் 
பார்கிறார்களாம்

தேசம் தாண்டி வந்த 
காதல் என்பதால் 
தேள் என வார்த்தையால் 
கொட்டுகிறார்கள்

என் ....... நீயானால்..!



என் வானில் நீ நிலவாய் இராதே..!
தேய்ந்து விடுவாய்..
என் செடியில் மலராதே..!
உதிர்ந்து விடுவாய்..

என் கண்ணில் கனவாகாதே..!
கலைந்து விடுவாய்..
என் இமையில் மையாகாதே..!
கண்ணீரில் கரைந்து விடுவாய்..

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

என் கல்லறைவரை நீதான்





உணர்வாக என்னில் நீ 
நேசத்தை கொடுத்து
உனக்காக என் இதயத்தை 
முழுமையாக இடம் பிடித்து
உறங்காத பாசத்தை உன்னில் 
நான் தொடுக்க வைத்தாய்

விதிவிலக்காக...!



சுழலும் பூமி 
சிதைந்திடும் போது
சொர்க்கம் நரகம் - நாம் 
கண்டிடலாமோ...?

விஞ்ஞானம் எதையும்... 
சொல்லவேயில்லை...!
வெட்டியாய் வார்த்தை... 
விட்டுத்தான் என்ன...?

சுற்றுது பூமி...! 
அது உண்மை...!! 
சுழற்சியும் பூமியின்...! 
ஒரு தன்மை...!!

பிரியாதே உயிரே..


காலம் கலைத்து விட்ட கனவுகளுடன் 
வறுமையும் விரக்தியும் விடாமல் விரட்டியடிக்க 
ஓயாமல் ஓடி ஓடி கால் இடறி விழுந்த என்னை 
மார்பில் தாங்கி கொண்ட காதலன் நீ தானே...

வேதனையின் விளைச்சலில் அணை மீறி 
பாய்ந்த என் விழி நீர் நிலம் தொடும் முன் 
கைகளில் ஏந்தி கொண்ட தோழனும்  நீ தானே...
மஞ்சள் தாலியும் மடியினில் மழலையும் 
தந்த என் மன்னவனும் நீ தானே..



இருளிலும் விடிகின்ற நீ...


நிலவொன்று நடந்து வருகின்ற அதிசயமும்
அழியாத ஒவியமாய் என்னிதயத்தில்
அதன் பாதச்சுவடுகள் பதிந்து வருகின்ற
இனனோர் அதிசயமும் 
காதலில்தான் உள்ளதோ...?

வளர்பிறையும் தேய்பிறையும் - உனது
ஆரம்பத்தையும் முடிவையும் காட்டுகிறது
அதேபோல்தான் என்னை அழவைப்பதும்
சிரிக்கவைப்பதும் உனது இன்பமாய்யுள்ளதோ..?

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

காதல் வானில்


இளமனம்
சுகம் தேடி
கதல்வானில் பறக்குதடி...

நீ சொன்ன
ஒரு வார்த்தை
என்னை உயிர்வாழ சொல்லுதடி...

விடியாத
என் உலகம்
உன்பார்வை கண்டு விடியுதடி...

புரியாத
பல வினாக்களுக்கு
இன்று விடைதெரிந்து போனதடி.....

நீதானே...!!!


பூமிக்கு சுழற்சியை...
கொடுத்தவள்  நீதானே...!

பகலுக்கு ஒளியை...
அளித்தவள் நீதானே...!

இரவிற்கு நிலவை...
இரந்தவள் நீதானே....!

நதியையும் கடலையும்....
இணைத்தவள் நீதானே...!
 
காதலுக்குள் மோதலை...
சேர்த்தவள் நீதானே...!

திங்கள், 2 ஏப்ரல், 2012

கவிதையைக் கண்ணீராய்



ஊரறியாப் பெண்மை 
உன்னை உணர வழி இல்லையே 
பெயரறியாக் கன்னி உன்னில் 
கலக்க வழி தேவையே ...

சுடிதார் சொர்க்கமுனை உயிரில்
சுமக்க வழி தேடியே
சுமப்பேன் என் கனவில் 
உன் நினைவுத் தொல்லையே ...

எனை நோக்கா உன் பார்வை 
எட்ட வழி புரியவே 
எட்டி நின்றே உனை ரசித்தேன் 
ஓரக் கண்ணால் கொஞ்சமே ...

அண்ணலும் நோக்க அவளும் நோக்க



மாடத்தில் அவளும்
மண்ணில் அவனுமாக
கண்கள் மட்டுமே
கதைத்து கொண்டன.

அன்று ஜனகனின்
மகளுக்கு வாய்த்தது
பின்பு பல யுகம் கழிந்து
இந்த ஜனகனுக்கு வாய்த்திருக்கு.

அண்ணலும் நோக்க
அவளும் நோக்க
என்ன தவம் செய்தேனா

உணர்வாய் என்றும் நீதானே...!!




விழி சிந்தும் மழையில் 
இரத்தம் சிந்தியது என்னிதயம்...
மனது வாடிப் போன காயத்தால்....

உன் சுவாசம் மூச்சாய் 
என் இதயவறைகளில்....
மூச்சு திணறிப்போகிறேன் 
உன்னை நினைக்கையில்....

உன்னுள்ளே சிறைப்பட்டுப் 
போக நினைத்தவள் 
என்னுள்ளே அடைபட்டேன் 
உனைக் காணாமல்...