well come to காதல் கவிதைகள்..!!

திங்கள், 30 ஜனவரி, 2012

யாழ்ப்பாண பொண்ணு


யாழ்ப்பாண பொண்ணு
யாழ் மீட்டும் கண்ணு
யார் என்று கேட்டது மனசு
யாவும் இவள்தான் என்றது காதல்
 
அவளை தேடித் தேடி போனேனே 
தேகம் சிலிர்க்க தேய்ந்தேனே
தீண்டும் தீயாய் அவள் நினைவுகள் - தேகம் 
தீண்டித் தீண்டி கொல்லுதே
 
என் காதலின் உருவம் நீயடி
என் இதயத்தை தீண்டுவது ஏனடி
என் விழியின் பார்வை நீயடி 
என் கனவினை திருடுவது ஏனடி....

இருதயம் இறுக்கிப்பிடித்த என் மரணம்.


புதிதாய் ஒரு விதி
எழுத வேண்டும்.....

நிறைவில்லா உறவுகளுக்கு
நிறம் பூச ஒரு சூரியனின்
விடியலை சுண்டி
இழுக்க வேண்டும்

வேதனை நிரம்பிய மௌனம்
வெடிக்கத்துடிக்கும் மரணம்
தொலைத்துவிட்ட சொர்க்கம்
தூது சொல்லும் காற்று
காதல் கொடுத்த நரகம்......

கனவுக்குள்ளும் நீதானே..


நீலப்பட்டாடை விரித்து சுருண்டு
நீந்திவந்து கரை அடிக்கும் அந்த
அலையை ரசிக்கும்போதிலும் -அட
அலைமீதும் உன் முகமே...

மலைமீது வந்திறங்கி மூடிநிற்கும்
மேகம் அதன் வடிவு கண்டு
சொக்கி நிற்கும்போதிலும்- அங்கும்
உன் கூந்தல் அழகே தெரிகிறது

உண்மைக்காதல்


காதல் பாவமா...?
என் வாழ்வே சோகமா.....!
காமம் கொண்ட காதல் முன்னே - என்
தூய காதல் வாழுமா...?
என் உண்மையான உள்ளம்
உன்மேல் உருகி வைத்த காதல்....
உதடு ரெண்டும் ஒட்டா - என்
உண்மைக்காதல் வாழுமா...?

உயிர்தந்து செல்வாயா,,??


நீ விலகியிருந்தால்
என் காதல் விலகி
போகாது..!
என் காதல் என்றுமே
நினைவுகளாக உன்னை
தொடரும்..!


இதுதான் காதல்


நெஞ்சின் ஓரத்தில்
இடம் கேட்டு வந்தவளே
நெஞ்சே நீயாகிப் போனதன்
விந்தை என்ன ?

ஓரப் பார்வையால்
என்னை சாய்த்தவளே
வாரம் ஓர் புதுப் பெண்ணாய்
ஆவதன் விந்தை என்ன ?

நான் ஒரு சோக சுமை தாங்கி



                                          நான் ஒரு சோக சுமை தாங்கி 
துன்பங்கள்  தாங்கும் இடிதாங்கி
பிரிந்தே வாழும் நதிக்கரைபோல
தனித்தே வாழும் பாவி
ஒரு வழிப்பாதை என் பயணம்
மனதில் தினம் தினம் ஏனோ பல சலனம்
இறைவன் இணைத்தது எல்லாம் பிரிவதற்கா
இதயங்கள் எல்லாம் மறப்பதற்கா

செவ்வாய், 24 ஜனவரி, 2012

மொழி





தொடாமல் பேசுவது 
காதலுக்கு நல்லது. 
தொட்டுப் பேசுவதுதான் 
நட்புக்கு நல்லது. 
தொடுதலின் வழியே 
கசியும் அர்த்தங்களை 
எந்த மொழி 
பேசிவிடும்

முகவரி



பெண்ணே உன் முகம் பார்க்கும் போது,,
      என் முகவரியை தொலைத்து விடுகின்றேன் !!

உன் புனைகை பார்க்கும் போது,,   என்னை நானே
   கிள்ளிப் பார்கின்றேன் இது நியம் தானா என்று ???

என்னை நீ பார்க்கும் ஒவ்வொரு தடவையும்
    நான் சிலுர்த்துப் போகிறேன் !!!.....

காதலன்றி…




என் சாலைகள் உன் துணையின்றி நீள்கின்றன
என் நாட்கள் உன் வழி பார்த்து விடிகின்றன
என் இரவுகள் உன் அணைப்பின்றி கழிகின்றன
என் சுவாசம் உன் வாசமின்றி வாடுகிறது
என் கண்கள் உன் பிம்பம் காணாமல் கண்ணீரைப் பொழிகின்றன
என் இந்த நீண்ட காத்திருத்தல் எப்போது முடிவுக்கு வரும்?
என் காதல் எப்போது உன் மெய் சேரும்?
இனியொரு ஜென்மம் உண்டென்றாலும்
அதில் உன் துணையாகும் வரம் வேண்டும்.

காதல் ஒரு மரண அவஸ்தை!


அன்று நண்பர்களாய்
அறிமுகம் ஆனோம்!
இன்று காதலராய்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
நீ நண்பனாய் இருந்தவரை என்
துக்கத்திலும் சந்தோசத்திலும்
வெற்றியிலும் தோல்வியிலும்
பங்கெடுத்தாய்....

புதுமைக்காதல்



                                     சொன்னாலும் புரியாது 
சொல்லிலும் அடங்காது
கண்ணான காதல் எது
வேறு கணக்கிடவும் முடியாது
மண்ணாக போகும் மானிடா
மண்ணில் உண்மைகாதல் ஏதடா?
மையல் மங்கை காதல் இது
சாகும் வரை தொடரும் பாடல்

இனியவனே



               காதலனே உன் 
தொடர் மௌனம்
உன்னவளை மௌனமாகவே
கொன்றுவிடும்
இதயம் திறந்து
உள்ளம் மகிழ்ந்து
உன்னைக் காதலித்தவள் - ஆனால் நீ
உன் உறவுதான் பெரிதென்று
அவளை மனம் வருத்தி கதறவிட்டாய்
உன் பிரிவால் கரைந்து போனதே
அவளும் அவளின் அன்புக்காதலும்...

வெள்ளி, 20 ஜனவரி, 2012

சுகம் காணும் என்சோகம்....


 


கல் உருவில் தெய்வங்கள்
பலவுண்டு இவ்வுலகில்
என்சோகம் துடைத்திட
ஒன்றும் இல்லை என்னருகில்
உன் உரு கண்டேன்
என் உடல் மனம் இழைத்தேன்
உன் வாய் மொழியை
என் தாய்மொழி என்றேன்

காதலேனும் வாழட்டும் ...!!




நினைவுகளை தொலைத்து 
நிம்மதியாய் வாழவிடு என்னை 
கனவுகளில் வந்து கதை பேசி 
கண் சிமிட்டிச் சிரிக்காதே

நீயாகிய என் நினைவுகள்




என் கண்ணில் பட்டு
நெஞ்சில் படர்ந்தவளே
என் நினைவுகளைக்
கொண்டு போனதேனோ..?



நீ வந்த வழி
சென்ற வழி மீண்டும் மீண்டும்
பார்க்கத்தூண்டுவதேனோ..?

வியாழன், 19 ஜனவரி, 2012

உயிரின் வலி.....



உன்னை நினைக்காத நேரம் மிக குறைவு..
உயிரின் வலியாக உன் கனவு...- இந்த 
ஊமை நெஞ்சின் ஓலம் 
உனக்கு கேட்பதும் அரிது...

நம்பிக்கையின் பலமே நட்புதான் !

நம்பிக்கையில் பலமே நட்புதான் 
நாள் தோறும் வளந்திடும் நட்புதான் 
தூய வழியின் இலக்கணம் நட்புதான் 
துளிர்விட்ட கொள்கையின் சொர்ப்பணம் நட்புதான்

காயத்தில் இனி(க்) காதலி


                         சாயம் வெழுக்கவில்லைப்  
பெண்ணேயுன்  மாயக் காதல் 
இன்னும் மாய்ந்திடாக் காதலாய் 
என் நெஞ்சில்

இதழோரச் சிரிப்பாலே ...!




இதழோரச் சிரிப்பாலே
இதயத்தை சாய்த்தவளே
முதல் பார்வைதனை வீசி
எனை கொள்ளை கொண்டவளே
நுனி மூக்கின் கோபத்தால்
உனை பார்க்க வைத்தவளே 

என்னுள் நீ



மூடிய விழியின் விம்பமாய் நீ
காணும் பொருளிலும் 
அருவமாய் உன் முகம்
தேடும் வாழ்வினில் அருகினில்
நீயும் நானும் இல்லை

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

நீதானே என் கீதம்



                                           என் காதலிக்காய் காத்திருக்கும்
                                                  என் காதலின் கால் தடங்கள்
                                          அவள் முகவரியை பார்த்திருக்கும்
                                                       என் காதல் கடிதங்கள்...........

காற்றில் வந்த கடிதம்




முத்திரை ஒட்டப்பட்ட
முகவரியற்றுக் காற்றில் பறந்து வந்த
ஓர் தபால் என் வீட்டு வாசலில் - கண்டதில்
விபரம் அறிந்திட கண்கள் ஊர்ந்தன

காதலின் இனிய சுகம்


 
    காதலிப்பது சுகம்
காதலை சொல்வது சுகம்
   காதலில் காத்திருப்பது சுகம்
கவிதை எழுதுவது சுகம்

புத்தாண்டு

    
     புத்தாண்டே நீ பிறக்கும்போதேல்லாம் 
             புத்தாடைகட்டி புத்துணர்ச்சி பொங்க 
         புதுப்பொலிவோடு புன்னகை சிந்தி 
              உன் பிறப்பிற்காய் காத்திருந்த அக்காலம்
                       அது பொற்காலம்

சனி, 14 ஜனவரி, 2012

பேனா ...



 என் பெயரை எழுத
   மறுத்த என் பேனா
உன் பெயரை மட்டும்
   எழுத மருந்ததே
        இல்லை *.....................

நீயே .....

 
  
அழகான கவி பிறக்கும் 
அந்த நொடிகளில் -என் 
நெஞ்சத்தில் தெரிகிறது  
உன் வதனம் >.......

மீண்டும் வா - நான் தெளிந்திட வா!




சலனமற்றுக் கிடந்த

என் மனக்குளத்தில்

உன் பார்வை கணையை

எய்துவிட்டு சென்றவளே


கலங்கி கிடக்கிறேன்

உன் கணையலைகளால்

மீண்டும் வா - நான்

தெளிந்திட வா!

தினம் உன்னை பார்க்க வேண்டும்




 தினம் உன்னை 

பார்க்க வேண்டும்

என்பதற்காகவே

டியூசன் எடுக்கிறேன்

நடத்துனர் பையன்களுக்கு

ஜன்னல் ஓர இருக்கை வேண்டி

வெள்ளி, 13 ஜனவரி, 2012

வருக !! தமிழ்ப் புத்தாண்டே வருக !!




தமிழ்ப் புத்தாண்டே வருக !! - எங்கள்
தாய்நிலம்  சிறக்க வருக.
தைத்திருநாளே வருக !! - எங்கள்
தவறுகள் நீங்க வருக !!.
அகதியான எங்கள் வாழ்வு
அற்றுப்போக வருக !!.
அமைதி பெருக  எங்கும்
ஆசையோடு வருக !!

காதலே!


காத்திருந்து
காதலித்த காலம்
காலாண்டாகிவிட்டது
கருவறையில்
காதலிக்கும்
காலம் இன்றாகிவிட்டது

நினைவுகள்





உன்னை
தேடித்தானே - என்
மனம் அலைகிறது
உன்னை
நாடித்தானே - என்
மனம் வருகிறது

பெண் பார்வை


     
பெண்ணே உன் 
சிரிப்பும் பார்வையும் 
செல்லகதைகளும் 
என்னை கொல்லுதடி

‎!!! தினம் தூற்றுவேன் !!!


தூய உள்ளத்தை 

அவளுக்கு கொடுத்து விட்டு 
துன்பங்கள் தினம் தினம்
ஏன் இறைவா
துவண்டு கிடக்கிறாள்
துளிர்விட்ட கனவை
துவம்சம் செய்ய சொன்னதால்
தூயவளாய் நானும்
நினைத்து விட்டேன்

புதன், 11 ஜனவரி, 2012

கண்ணீர் துளிகள்



என் காதலை பொய் 
என்றாய் நீ
என்னை காதலிக்கவில்லை 
என்றாய் நீ
  
உன்னை காதலிக்கின்றேன்  
நான் 
உன்னை காதலிப்பேன் 
நான்

காதலே!




காத்திருந்து
காதலித்த காலம்
காலாண்டாகிவிட்டது
கருவறையில்
காதலிக்கும்
காலம் இன்றாகிவிட்டது

!!! அறியாமல் !!!



உயிராய் நேசித்த காதலை 
உதறி விட நினைக்கிறாயே 
உருகி நான் போனலும் 
உன் மீது  நான் கொண்டகாதல் 
உருக்குலையாது என்பதை அறியாமல்

யாருமற்ற அநாதையாய்..!!



ன் 
நினைவுகளும் என்னை
இம்சிக்கிறது...
காரணங்கள் ஏதுமின்றி 
உணர்வுகள் 
சில நிமிடங்களுக்கொரு முறை 
மாறி மாறி மறைகின்றன..

இடம் இல்லை


  
உன் கூந்தல் இவ்வளவு பெரிதாக இருக்கின்றது ,
    அவதானித்த நான் ,,,,,
 இவ்வளவு சிறிய உன் மனதை 
       அவதானிக்க மறந்ததென்ன??
          
அதி எனக்கு இடம் இல்லை என்பதையும் ,,
    நினைக்க மறந்து விட்டேன் ........??!!

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

புன்னகை



புன்னகை செய்வதற்கு 
மட்டுமே உங்கள் இதழ்களை 
பயன் படுத்துங்கள்
மற்றவர்கள் மனம் 
புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்

மரணத்தின் முதல் எல்லை


அன்பே !
எண் திசை எனைச் சுற்றி இருந்தாலும்
என் திசை உன்னை நோக்கியே இருக்கும்..
கனவின் நீளம்
கண் விழித்ததும் முடிவடையும்
உன் நினைவின் நீளம்
கண் மூடும் வரை தொடர்ந்து வரும்

பட்டாம் பூச்சிகள்




உலகினில் உள்ள
அழகினமுதம்
அருந்திடாப் பேதைகள்
நாங்கள்.
அழகின் அமுதத்தில்
நாள் தோறும்
உறவாடும் மேதைகள்
நீங்கள்.

உறவுகள் தந்த வலிகள்


பற்றில்லாத நெஞ்சங்கள் 
தருகின்ற துன்பங்கள் 
எழும்பாத‌ கண்ணீராய் விழுகின்றதே 
பொய் பித்தர்களின் 
உன் உறவுகளின் அன்பு 
பாசங்கள் என்றுமில்லை

தமிழா




தமிழா நீ 
வாழ்ந்து கொண்டே போராடு
புதுயுகம் உனக்கும் சேர்த்துதான்
நீ மடிந்து பெறும் உலகம்...
தமிழா நீயும் வாழ வேண்டும்!
தமிழும் வாழ வேண்டும்!