சனி, 31 டிசம்பர், 2011
பூக்களின் சொந்தக்காரியே!
தோழியே!!
மறைந்தாயோ என்னை? - இல்லை
மறக்கடிக்கபட்டாயோ?
என் கவலைகள் மறந்து
மனம் விட்டு பேச
மணிக் கணக்கில்
அரட்டை என்னும் பெயரில்
ஆயிரம் கதை சொல்லி
குதுகலித்திடும் அலைபேசிகள்
சலனமின்றி சமாதியானது
உன் மெளனத்தினால்,
தொலைவாகி போனதால்
தொலைந்து போனதா
உன் இதயம்...?
நெருங்கிட நினைத்தாலும்
வார்த்தையால் வெடிக்கிறாய்
உதிர்ந்திடும் நிமிடங்களில்
சிலிர்த்திடும் சினங்களினால்
சின்னாபின்னமாகிறது
நட்பின் ஆயுள்.
மனசு....
திசைகள் இன்றி
திண்டாடிய மனம் ஒன்று
பாவை அவள்
பார்வை தீண்டலினால்
பக்குவமானது அன்று...
இதய கூட்டினை உடைத்து - அதில்
அவளை தான் இருத்தி
நேசிக்கத் தொடங்கியது அன்று..
படிப் படிப்யாக - அது
இமயமாக வளர்த்து
காதல் என்னும் போர்வையில்
ஆட்சி செய்கின்றது இன்று...
உதிரத்தில் கலந்திட்ட அவள்
உயிருள்ள வரை
உயிர்நாடியாய் தன்னுள்
என்றும் இருப்பாள் என்னும்
நம்பிக்கையில் காலம் நீள்கிறது.
உணர்கின்றேன் ............!!

நான் தனிமையில் இருக்கும் போது -
நமது காதலை உணர்கின்ன்றேன் ..........!
நாம் இணைந்து இருக்கும் போது
நமது இனிமையை உணர்கின்றேன் ............!!
வியாழன், 29 டிசம்பர், 2011
வேடம்?
நீ வேடம் தாங்கினாய்
என்னைக் காதலிப்பதாக ,,
நான் வேதனை படுகின்றேன்
உன்னை என மனதில் ஆழமாய் பதிந்ததற்கு .....
காரணம்

உன்னை பிடித்ததற்கே
காரணம் தெரியாதவன்
நீ பிரிந்ததட்காகவா
காரணம் கேட்கப் போகிறேன் ......???
வில் வித்தை !!??

எங்கு கற்றாய்
வில் வித்தை !!??
என் இதயம்
குறிபார்த்து
இத்தனை தெளிவாய்
குறிவைக்க..........???
முடியாது!!
தாயானாலும் தலை வழியை ,
பகிர முடியாது!!
நீ என் உயிரானாலும்
உன் மனதை உணர முடியவில்லை ???

உன் கனைப் பார்த்து
ஏமார்ந்து விட்டேன் !!
உன் மனதைப் பார்க்க
மறந்து விட்டேன் .......
அதி என்னொருவன் குடியிருக்குறான் !!!
புதன், 28 டிசம்பர், 2011
தமிழை நேசியுங்கள் ,,,,
அயல் நாட்டிலும்
அவஸ்தைப் படுகிறேன்
அயல் மொழி தெரிந்தும்
அவதியுறுகிறேன் இன்று
அதையும் அறிந்து விட்டேன்
தமிழன் நான் என்பதாலாம்
அவஸ்தைப் படுகிறேன்
அயல் மொழி தெரிந்தும்
அவதியுறுகிறேன் இன்று
அதையும் அறிந்து விட்டேன்
தமிழன் நான் என்பதாலாம்
நேர்மையை கையாண்டேன்
நெடு நாளாய் தவிக்க விட்டார்கள்
நிம்மதி நான் இழக்கிறேன்
நீதி மறுக்கிறார்கள் காரணம் கேட்கையிலே
நீ தமிழன் என்கிறார்கள்
நெடு நாளாய் தவிக்க விட்டார்கள்
நிம்மதி நான் இழக்கிறேன்
நீதி மறுக்கிறார்கள் காரணம் கேட்கையிலே
நீ தமிழன் என்கிறார்கள்
காதல் தேசத்து அகதி

இன்னொரு இதயம்
சுகமாய் வீழ்ந்த
அந்த நொடிப் பொழுது
அவன் சுவாசம்
எனைத் தீண்ட
என் மனது காதலை
பூத்த அந்த நாழிகை
எனைத் தீண்ட
என் மனது காதலை
பூத்த அந்த நாழிகை
அவன் பார்வைகளால்
என் இதயத்துக்குள்
சித்திரம் வரைந்த
அந்த மணித்துளிகள்
என் இதயத்துக்குள்
சித்திரம் வரைந்த
அந்த மணித்துளிகள்
அவன் நினைவுகள்
என் மனதுக்குள்
இறங்கிய தருணங்கள்
என் மனதுக்குள்
இறங்கிய தருணங்கள்
சாமியோ நான் வாழும் பூமியோ
நீ கோபப்பட்டதன்
விசித்திரம்
புயல் வீசினால் எண்ணிக்கொள்வது
புரியாத உன் அனல்
பார்வைகள்
காட்டுத் தீ ஆரம்பம்
உன் விழியோர
ஸ்பரிசங்கள் தான்
உன்னை சுவாசித்து முடிந்ததும்
யாசிப்பது முத்தப்
பரிசில்கள் தான்
உன் விழியோர
ஸ்பரிசங்கள் தான்
உன்னை சுவாசித்து முடிந்ததும்
யாசிப்பது முத்தப்
பரிசில்கள் தான்
தேவி நீ புன்னகைத்தால்
பூக்கள் மலர்கிறது
வாய்விட்டு சிரித்தால்
வானம் மழைபொழிகிறது
இரண்டும் கலந்ததால்
என் இதயம் திறந்தது
வாய்விட்டு சிரித்தால்
வானம் மழைபொழிகிறது
இரண்டும் கலந்ததால்
என் இதயம் திறந்தது
இளமைப் பருவத்தை
இறுக்கமாக வைத்திருந்தேன்
உன்னைகானும் வரை
உன்புன்னகையில் மயங்கியது
நான் மட்டுமல்ல
என்வீட்டு தோட்டமும்தான்
இறுக்கமாக வைத்திருந்தேன்
உன்னைகானும் வரை
உன்புன்னகையில் மயங்கியது
நான் மட்டுமல்ல
என்வீட்டு தோட்டமும்தான்
காத்திருப்பு!!

கன்னியவள் கண் வைத்துக்
காத்திருக்க வெண்ணிலா உலா வந்தது!
காதலின் வேதனையை
நீராய் விழி சொட்ட
வஞ்சியவள் நொந்து மனம்
நெஞ்சில் சுமந்த மன்னவனை
நித்தம் எண்ணி ஏங்கும்
பாவை மனம் அவனிடத்தில்
பஞ்சாய் பறந்து போனது...
பிறந்தார் புனிதர்
அவதாரபுருஷர் அவதரித்தரே
அவலங்கள் அத்தனையும் போக்கிடவே
தூய ஆவியின் புதல்வர் அவர்
தூய உள்ளம் கொண்டவரே
தூய ஆவியின் புதல்வர் அவர்
தூய உள்ளம் கொண்டவரே
மாட்டுத் தொழுவம் தனிலே
மரியன்னை மகனாய் பிறந்து
மாற்றங்கள் நிகழ்த்திய
மாய மனிதர் அவரல்லவோ
மரியன்னை மகனாய் பிறந்து
மாற்றங்கள் நிகழ்த்திய
மாய மனிதர் அவரல்லவோ
வாழ்வுக்கே சுவாசமனாய் ..!!!

என்னவளே உன்னை பார்த்தால்
பார்வைக்கும் பசியெடுக்கும்
கண்மணியே உன்னை நினைத்தால்
நெஞ்சுக்குள் குளிரடிக்கும்
கண்மணியே உன்னை நினைத்தால்
நெஞ்சுக்குள் குளிரடிக்கும்
வண்ணமகள் நீ வந்தால்
வார்த்தைகள் கவிதையாகும்
என்னவளை அழைக்கையிலே
பெயருக்குள் உயிர் ஊறும்
வார்த்தைகள் கவிதையாகும்
என்னவளை அழைக்கையிலே
பெயருக்குள் உயிர் ஊறும்
எரியும் ஏக்கங்களை
அணைத்து விடுவதாய் இருந்தது
உன் வார்த்தைகள்..
உன் வார்த்தைகள்..
மொழியினை
பின்னுக்குத்தள்ளி
மௌனத்தினை பேசவைத்தது
உன் புன்னகை..
பின்னுக்குத்தள்ளி
மௌனத்தினை பேசவைத்தது
உன் புன்னகை..
நட்சத்திரங்களை
தோற்கடித்து நள்ளிரவில்
நடமாடுவதாயிருந்தது
உன் நேசம்..
தோற்கடித்து நள்ளிரவில்
நடமாடுவதாயிருந்தது
உன் நேசம்..
அழகாய் இருக்குறாய் .......

இன்று நீ மிகவும் அழகாக இருக்குறாய்
நீ வெட்கப்படும்போது இன்னும் அழகாக இருகிறாய் ....
உன் கன்னத்தில் தொட்டும் தொடாமல் இருக்கும் -தலைமுடி.........
உன் உடம்பில் படும் படாமல் இருக்கும், உன் -சுடிதார் ......
உன் முகத்தில் விட்டும்விடாமல் இருக்கும் -வெட்கம் ........
இதல்லாம் சேர்ந்து நீ இன்னும் அழகாய் இருகிறாய்.......
கொடியது காதல்
பின் பெண்கள் வர்க்கத்தை
மதித்தேன் ............
நீ என்னை சந்தித்த பின்
ஏனடி ஆண்கள் வர்க்கத்தை வருகிறாய்??
அவ்வளவு கொடியதா காதல் ????????????????

காற்று என்ன சொல்லுமென்று பூ அறியும் ...
நான் என்ன சொல்லவந்தேன்,
நெஞ்சில் என்ன கொண்டு வந்தேன் ,,
பெண்ணே நீ அறியாயோ????
முகவரியை தொலைத்து விடுகின்றேன் !!

என் முகவரியை தொலைத்து விடுகின்றேன் !!
உன் புனைகை பார்க்கும் போது,, என்னை நானே
கிள்ளிப் பார்கின்றேன் இது நியம் தானா என்று ???
என்னை நீ பார்க்கும் ஒவ்வொரு தடவையும்
நான் சிலுர்த்துப் போகிறேன் !!!.....
வெள்ளி, 23 டிசம்பர், 2011
பிரிவின் துயரம் ..........
உருக்குலைந்த போதும்
உண்மையான நான்
உன்னை நேசித்ததால்
உயிருள்ள வரைக்கும்
உன்னை நினைத்து
உன்னோடு பழகிய நாட்களை
உறவாகி வாழ்ந்து வருகிறேன் ...........,,??
புதன், 21 டிசம்பர், 2011
உறவுகள்
மரணித்துப்போன எங்கள்
மானாகப் போடிப் பெரியப்பா
நீர் ஓர் பெரிய மனிதர் தான்!
பெட்டி இழைத்தும்
பிரம்பு பின்னல் வேலை செய்தும்
வட்டக் குளத்து வரால் மீன் பிடிக்கக்
கரப்புகளும் கட்டி விற்றுக்
காலத்தை ஓட்டும் ஒரு கிழவன்
என்றே நம்மூர் அறியூம்
நேற்றுவரை.
காதல் பலவிதம்
புதிரும் அல்ல
புதினமும் அல்ல!
புதியது புரியாதது!
உண்மையான காதல்
மனசளவில் புரிந்து கொண்டு,
விட்டுக் கொடுத்துப் போவது!
மற்றதெல்லாம் மோதல்!
வெறும் உடல் கவர்ச்சி!
மனசளவில் புரிந்து கொண்டு,
விட்டுக் கொடுத்துப் போவது!
மற்றதெல்லாம் மோதல்!
வெறும் உடல் கவர்ச்சி!
என் காதல்......
உன்னை இன்னும் ஒரு முறை பார்ப்பேனா என துடித்தேன்
உன்னை இன்னொரு முறை கண்டவுடன்.....
உன்னோடு பேச முடியாதா என தவித்தேன்
உன்னொடு போனில் பேசிய போது......
உன்னை சந்திக்க முடியாதா என ஏங்கினேன்
உன்னை சந்தித்த போது.....
உன்னை காதலிக்க முடியாதா என நினைத்தேன்
நீ என்னை காதலித்த போது....
சிறகுகள் இன்றி வானத்தில் பறவை போல பறந்தேன்
இப்பொ நீ எனக்கு கிடைத்த போது....
உன்னோடு எப்போ சேர்ந்து வாழ்வேன் என துடிக்கிறேன்...
நான் காதலிக்க.......
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள்.
நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள்
இருக்கின்றன.
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள்
இருக்கின்றன.
நான் பேச
இந்த உலகத்தில்
எத்தனையோ மொழிகள்
எத்தனையோ மொழிகள்
இருக்கின்றன.
ஆனால்,
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்.......
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்.......
facebook காதல்..!!!??
பார்க்க துடிக்கும் அன்பே
முதலில் நீ
பிறந்திருக்க கூடாதா
உன்னை
முழுமனதாய்
ஏற்றிருப்பேனே !!
பாராமலே என்மீது
பாசத்தை
வைத்த நீயும்
எட்டாத் தூரத்தில்
இருக்குறாய் !!
நான் உன்னை
அடைவது எப்படி ??
உன் இருப்பிடம்
வந்து விட்டால்
தேடுதல் வேட்டை
என் கண்கள்
தொடங்கிவிடும்
கானக்கிடைக்காததால்
உள்ளம் சோர்ந்து விடும்
இத்தனைக்கும்
உன்னை நான்
பார்த்ததில்லை
எப்படி நீ இருப்பாய்.....??
காதலர் தினம்
என் பிறந்த தினத்தை
நான் மறந்த தினம்…
காதல் மருத்துவம்
என் புண்களுக்கு மருந்து போடு
அல்லது
உன் கண்களுக்கோர் திரை போடு...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)