well come to காதல் கவிதைகள்..!!

புதன், 7 டிசம்பர், 2011

!!! அகம் மட்டும் பார்த்ததால் !!!



ஆயிரம் பூக்கள்
அழகாய் மலர்ந்தாலென்ன
ஆசை வார்த்தைகள்
அன்பால் பகிர்ந்தாலென்ன!
உத்தமி  நீயென உயிரும் சொல்ல
உலகுக்கே கூறிவிட்டேன்
உன்னுடன் உறவாடிப் பார்க்கத்தானே
உள் நெஞ்சம் ஏங்குதே!
உன்னை நினைக்கும்போது
எனை மறந்து இன்பம் பொங்குதே
உந்தன் இன்னிசைப் பேச்சு
தினம் என் காதில் கேட்குதே
உயிர் நீயென்று
உயிர் கொடுக்க வரவா
இதயம் கொடுத்த நெஞ்சோடு
உன்னை தேடி வரவா
இதயத்தில் வளர்த்தக் காதலை
உன் காலடிக்கே தரவா
முழ்சாய் பார்த்திருந்தால்
மூன்றே நாளில் மறந்திருப்பேன்
முகம் மட்டும் பார்த்திருந்தால்
முன்பே நான் மறந்திருப்பேன்!
அகம் மட்டும் பார்த்ததால்
ஆயுள் உள்ளவரை அழிக்காமல்
அழிக்காமல் நானிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக