
மூவுலகம் என்பதும் பொய் ...
முத்தமிழ் இலக்கியம் பொய் ...
சுட்டெரிக்கும் சூரியன் பொய் ...
சுற்றம் தரும் சுகம் பொய்...
கண்ணின் கருவிழி பொய் ...
கரு விழியின் காட்சி பொய் ...
வண்ணமிகு வானவில் பொய் ...
வியக்க வைக்கும் அதிசயம் பொய் ...
உலகை படைத்த இறைவன் பொய் ...
உத்தமர் தம் உள்ளம் பொய் ...
பாலின் வெண்மை பொய் ...
பகலுக்கு பின் வரும் இரவு பொய் ...
இரவில் வரும் இருட்டு பொய் ...
இயற்கை தந்த வளம் பொய் ...
விண்ணில் பறக்கும் விமானம் பொய் ...
கடலில் மிதக்கும் கப்பல் பொய் ...
படைப்பின் மகத்துவம் பொய் ...
பண்பின் இலக்கணம் பொய் ...
சான்றோர் சிந்தனைகள் பொய் - ஆம்
சகலமும் பொய் தான் ....
நீ என்னை காதலித்தது
பொய் என்றால் !........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக