
காதலர் தினம் மட்டும்
நினைப்பதல்ல காதல்
காதலர் உயிர் உள்ளவரை
நினைப்பதே காதல்
ஒற்றை ரோசாவில்
முடிவதல்ல காதல்
பிறவி முழுவதும்
தொடர்வதே காதல்
பரிசுப் பொருட்கள்
பகிர்ந்து கொள்ளுவதல்ல காதல்
ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்வதே காதல்
கடற்கரையில் பேசுவது
மட்டுமல்ல காதல்
காலம் முழுவதும் இணைந்து
இருப்பதே காதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக