
உன்னை விட எனக்கு
உலகம் தெரியவில்லை
விண்ணில் கூட - வட்ட
நிலவின் முகம் தோன்றவில்லை
கவியை விட என்னிடம்
மொழியேதும் இன்று இல்லை - என்
ஆவியைக் கூட நான்
அந்நியனாய் தேடும் நிலை..?
தேரின்று விடமாச்சே
தேவதையே புரியவில்லை
வானளக்காப் பெண்ணழகோ
வானவில்லோ தெரியவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக