
ஜாதி மதங்களை கடந்ததாம் காதல்
பலர் சொல்ல நான் இதை கேட்டதுண்டு ...
நீ சொல்லி தான் தெரிந்தது இன்று
உயிருள்ள காதலை விட
உணர்வற்ற ஜாதி உயர்ந்தது என்று
என் கண்கள் பார்த்து
உன் காதல் சொல்லும் போது
தெரியவில்லையா
நான் தாழ்ந்த ஜாதி பெண் என்று
எத்தனை கனவுகள்!
எத்தனை வாக்குறுதிகள்!
என் உயிர் துடித்து கதற கதற
உன் அப்பாவின்
ஜாதி வெறி பிடித்து
கொழுந்து விட்டு எரியும் தீயில்
அள்ளி வீசி விட்டாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக