
உறக்கத்தில் இருந்த காதல்
சிறகடித்து எழுந்து
காதலனைத் தேடி
தூதனுப்பி காத்திருந்து
கண்ணால் கதை பேசி
காலங்களைக் கடத்தாது
செவ்வாயால் ஒருமொழி
செப்ப நினைத்து
குளிர் நீரில் நீராடி
வெளிர்நீல துகிலுடுத்தி
வதனத்தில் திலகமிட்டு
தெருவிலே வேகமாக இறங்கி
வெயில் எரித்த போதிலும்
ஒய்யாரமாக நடந்து
தையலிவள் காதல்பொங்க
மையலோடு நாயகனை கண்டு
கட்டி அணைக்க முயன்று
எட்டி நின்று வெட்கப்பட,
உதடுகள் இரண்டு ஒரே நேரத்தில்
உச்சரித்தன ஒரு வார்த்தையை
"ஐ லவ் யூ"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக