
நம் காதலுக்கும் நட்புக்கும்
நூலிழை வித்தியாசம்
நம் காதல்
கோழையானால் நட்பாகவும்
வீரமானால் காமமாகவும்
ஒரு கோழைவீரனாய்
களமாடினாலும்
இதயத்தை வெல்லும்..
என் பார்வை தவறுதலாக
உன் முகம் தாண்டி
உடல் மேயும் தருணத்தில்
நீ காரி உமிழ்ந்து
கன்னத்தில் அறைந்திருந்தால்
உயிர்பிழைத்திருப்பேன்
நீ வெட்கித்தலை குனிந்தாய்
நான் கல்லறையானேன்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக