
காதல்...
இன்று புன்னகையோடு வரும்
நாளை கண்ணீர் சிந்தவைத்து ஓடிவிடும்
என்றே நினைத்தேன்.
காதல்...
சீச்சீ, கெட்ட வார்த்தை
அது எனக்கெல்லாம் ஒத்து வராது
என்றே கர்வமாக இருந்தேன்.
காதல்...
அப்படி என்றால் என்ன?
நானாவது காதலிப்பதாவது
என்று எகத்தாளமாகப் பேசினேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக