
நனைந்த என் வழிகளை
அவன் விழியால் துடைத்து
பூட்டிய என் இதயத்தில்
புன்னகையை மலர விட்டு
பூவாகப் பூக்கவைக்க
புனிதமாக வாழ்திடும் - என்
புதியவன் அவன் வருவானா......?
என் கடந்த காலத்திற்கு செவிகொடுத்து
என் நிகழ்காலத்தை மெருகூட்டி
என் மனக்காயங்களுக்கு மருந்திட்டு
என் எதிர்கால வாழ்விற்கு உருக்கொடுக்க
உதய சூரியனாக அவன் வருவானா........?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக