
உன்னையே என் மனம் எதிர் பார்க்கிறது
சில நேரம் உன் வராமை கண்டு
அது செத்துப்போகிறது
தவிக்கும் என் மனம் பறக்கிறது
பறந்த என் மனம் நூலறுந்து தெரிக்கிறது
என்னுடல் செத்துப் பிழைக்கிறது
வேவும் என் கண்கள் திடுக்கிட்டுப் நோக்கும்
நீ வருவதாக உணரும்
ஆனால்...
சில நிமிடங்களில் உணர்வு தளர்ந்து
அயர்ந்து போகும்
நான் உன்னைக் காண வேண்டும்
உன்னோடு சில வார்த்தைகள் பகிர வேண்டும்
சில்மிசங்கள் கொஞ்சம்
பல்வேறு கற்பனை என்றாலும்
எல்லாமே மாயக்கனவுகளின்
மாற்றங்களாகவே பரிணமிக்கிறது.
என் செய்வேன் நான்
காதல் ஏழை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக