
கண்களால் ஒருமித்துக் கலவி செய்து
உணர்வுகளின் சங்கமத்தால் உயிரில் ஊறி
நெஞ்சகத்தில் நெகிழ்வோடு கருத்தரித்து
கொஞ்சல்களால் குதூகலித்துக் குலவிக் கூடி
கெஞ்சல்களின் விரசங்களால் சரசமாடி
சொந்தமாய்ச் சூல் கொண்டு சுவாசமாகி
ஆயுள் வரை தொடரும் பந்தமுமாய் ஆகி
அர்த்தநாரியாய் பிணைந்து விட்ட உறவு
புதிதாய் எதைத்தான் நாடும் நம் மனமே
திகட்டாத தேடலில் ஆடுது அனுதினமே
தினம் தினம் நமக்கிங்கு காதலர் தினமே ..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக