
எத்தனை இரவுகளை தான்
நான் கடந்து வருவதடி
கண்மணி உன்னோடு
கனவுகள் பல காண ?
கண்களுக்கு ஏனோ வெறுப்பு
கன்னி உன்னை கண்களால் காணாமலே
இதயத்தால் காதல் கொள்கிறேனே என்று
எட்டு திசையில்
எத்திசையில் நீ இருக்கிறாய் ?
என் கடந்த காலங்களில் நான்
உன்னை கண்டு இருப்பேனா ?
எதிர் வரும் நாட்களில்
என்று உன்னை காண்பேன் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக